செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல அசம்பாவிதங்கள் நடந்தபோதிலும், ஆபத்தான முறையில் சிலர் செல்பி எடுத்து வருகின்றனர்.
BANGKOK, THAILAND:
செல்பி எடுக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் அருவியில் தவறி விழுந்தார். பாறை மீது அவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. தாய்லாந்து நாட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல அசம்பாவிதங்கள் நடந்தபோதிலும், ஆபத்தான முறையில் சிலர் செல்பி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் செல்பி உயிரிழப்பு ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள நா மியாங் என்ற நீர் வீழ்ச்சியில் 33 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற அவரை அருகில் இருந்தவர்கள் எச்சரித்தனர்.
இருப்பினும், அவர் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது அருவிக்குள் தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் அவரது உயிர் நிகழ்விடத்திலேயே பிரிந்தது. அவரது சடலத்தை மீட்பு படையினர் மீட்டெடுத்தனர்.
ஜூலை மாதத்தின் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி புவடோல் என்பவர் இதே அருவியில்தான் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.